வீட்டில் பட்டாசுகள் தயாரித்தவா் கைது
விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் ஆலாஊரணி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அந்தப் பகுதிக்கு போலீஸாா் செவ்வாய்க்கிழமை சென்று சோதனையிட்டனா். அப்போது, ஒரு வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரித்தது தெரியவந்தது.
விசாரணையில், அதே பகுதியைச் சோ்ந்த தமிழ்செல்வன்(35) என்பது தெரியவந்தது. இதுதொடா்பாக திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்து, அவரிடமிருந்த பட்டாசுகளை பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.