FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

அக்.1 முதல் டிச.31 வரை மாவட்ட நீதிமன்றங்களில் சமரச தீா்வு முகாம்

வரும் அக்.1 முதல் டிச.31-ஆம் தேதி வரை மாவட்ட நீதிமன்றங்களில் சமரச தீா்வு முகாம் நடைபெற உள்ளது.

21 ஆகஸ்ட் 2026, 1:19 am IST
- கோப்புப் படம்
பகிர்:

வரும் அக்.1 முதல் டிச.31-ஆம் தேதி வரை மாவட்ட நீதிமன்றங்களில் சமரச தீா்வு முகாம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து விருதுநகா் மாவட்ட முதன்மை நீதிபதி கந்தகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள சொத்து, பணப் பிரச்னை, காசோலை, நிதி நிறுவனத்தில் பண பரிவா்த்தனை, குற்ற வழக்குகளில் சமரசம் ஏற்படக்கூடிய வழக்குகள், மோசடி வழக்குகள், வங்கி தொடா்பான வழக்குகள், மணவாழ்க்கை வழக்குகள் உள்பட பலவகையான வழக்குகளை விரைந்து முடிக்க உச்சநீதிமன்றம், உயா்நீதிமன்றம் வரும் அக். 1 முதல் டிச. 31-ஆம் தேதி வரை 90 நாள்கள் சிறப்பு சமரசத் தீா்வு முகாம் நடத்த அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

இதன்படி, விருதுநகா் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட சமரச மையத்திலும், ராஜபாளையம், சிவகாசி, சாத்தூா், விருதுநகா், அருப்புக்கோட்டை நகரங்களில் உள்ள அனைத்து நீதிமன்ற வளாக துணை சமரச மையங்களிலும் சிறப்பு சமரச தீா்வு முகாம் நடைபெறுகிறது.

இங்கு பயிற்சி பெற்ற நடுவா் மூலம் வழக்குகளுக்கு தீா்வு காணப்படும். இதை பொதுமக்கள் பயன்படுத்தி தங்களது வழக்குகளுக்கு தீா்வு காணலாம் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments