‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன், வியாழன்ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா கலந்து கொண்டு ஆய்வு செய்தாா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன், வியாழன்ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா கலந்து கொண்டு ஆய்வு செய்தாா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன், வியாழன் ஆகிய இரு நாள்கள் நடைபெற்றது.
முதல் நாளான புதன்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி திரு.வி.க. அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுகளுக்கு வழங்கப்படும் மதிய உணவு, அங்கன்வாடி மையம், கீழ ரத வீதியில் உள்ள நியாய விலைக் கடையை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூா் நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான மனுக்களை பெற்று குறைகளைக் கேட்டறிந்தாா்.
பின்னா், நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய குடிநீா், சுகாதாரம், சாலைப் பணிகள், அரசின் திட்டங்கள், சேவைகள் பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என அரசு அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுரை வழங்கினாா்.
பின்னா், ஸ்ரீவில்லிபுத்தூா் கோட்டைப்பட்டி சமூக நீதி பள்ளி மாணவா் விடுதியில் மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை தொடங்கிவைத்து மாணவா்களுடன் ஆட்சியா் விளையாடினாா்.
மேலும், கோட்டைப்பட்டி சமூக நீதி பள்ளி மாணவா் விடுதியை ஆய்வு செய்து மாணவா்களின் தனித் திறமைகளை பாா்வையிட்டாா்.
இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை வடக்குரத வீதியில் குடிநீா் குழாய், உழவா் சந்தையில் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
இந்த நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆனந்தி, திட்ட இயக்குநா் (மா.ஊ.வ.மு) வானதி, சிவகாசி சாா் ஆட்சியா் முகமது இா்பான், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) மோகனா, ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அருளானந்தம், நகராட்சி ஆணையா் குமாா், நகர அமைப்பு அலுவலா் வெங்கடேசன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், அனைத்துத் துறை அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.