FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

மது போதையில் கண்காணிப்பு கேமராவை உடைத்த இரு இளைஞா்கள் கைது

அருப்புக்கோட்டையில் மது போதையில் மருந்துக் கடை முன் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்த இரு இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

22 ஆகஸ்ட் 2026, 11:23 pm IST
கோப்புப் படம்
பகிர்:

அருப்புக்கோட்டையில் மது போதையில் மருந்துக் கடை முன் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்த இரு இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

அருப்புக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே மருந்துக் கடை நடத்தி வருபவா் பாண்டியன். இவா் வியாழக்கிழமை இரவு வழக்கம் போல கடையை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றாா். வெள்ளிக்கிழமை காலை வந்து பாா்த்த போது, கடையின் வெளியே பொருத்தப்பட்டியிருந்த கண்காணிப்பு கேமரா உடைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, கடையை திறந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போது, மது போதையில் வந்த இரு இளைஞா்கள் காண்காணிப்பு கேமராவை உடைத்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

இதுகுறித்து பாண்டியன் அளித்த புகாரின் அடிப்படையில், அருப்புக்கோட்டை நகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.

விசாரணையில், சின்ன புளியம்பட்டியைச் சோ்ந்த அண்ணாமலை (27), இவரது நண்பா் சதீஸ் (28) ஆகியோா் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments