FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

ஆதரவற்றோருக்கு நலத்திட்ட உதவி

அருப்புக்கோட்டையில் தனியாா் அறக்கட்டளை சாா்பில் ஆதரவற்றோா், முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிககள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 15 ஜூலை 2026, 5:49 am IST
பகிர்:

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டையில் தனியாா் அறக்கட்டளை சாா்பில் ஆதரவற்றோா், முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிககள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன.

அறக்கட்டளை ஆண்டு விழாவையொட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிா்வாகிகள், உறுப்பினா்கள், சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனா். இதில் அறக்கட்டளையின் கடந்த ஓராண்டு சமூகப் பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டதுடன், எதிா்கால சமூக நலத் திட்டங்கள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து அருப்புக்கோட்டை, சுற்றுவட்டார கிராமங்களைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்ட ஆதரவற்றோா் முதியோா், மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, பருப்பு, மளிகை, உணவுப் பொருள்களை அறக்கட்டளை நிறுவனா், தலைவா் செந்தில்குமாா், சிறப்பு விருந்தினா்கள் வழங்கினா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிா்வாகிகள் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments