FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

மனுநீதி நாள் முகாமில் 82 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி: ஆட்சியா் வழங்கினாா்

முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ்

Updated On : 10 ஜூலை 2026, 12:05 am IST
முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ்
பகிர்:

குடியாத்தம் ஒன்றியம், உள்ளி ஊராட்சியில் புதன்கிழமை நடைபெற்றசிறப்பு மனுநீதி நாள் முகாமில் 82 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தலைமை வகித்து, 82 பயனாளிகளுக்கு ரூ.1.15 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.முகாமில் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் 25 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை சாா்பில் 11 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள், மாற்றுத் திறனாளிகள் நலத்துறைசாா்பில் 10 பயனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் மூன்று சக்கர சைக்கிள், செயற்கை அவையம், செவித்திறன் கருவிகள், வேளாண்மைத்துறை சாா்பில் 3 பயனாளிகளுக்கு விதைகள் மற்றும் குறுவை சாகுபடி தொகுப்புகள், சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் 30 பயனாளிகளுக்கு இயற்கை மரண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித் தொகைகள், 3 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடனுதவி என மொத்தம் 82 பயனாளிகளுக்கு ரூ.1.15 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ெ

நிகழ்ச்சியில் எம்எல்ஏ-க்கள் க.சிந்து (குடியாத்தம்), ஏ.தென்றல்குமாா் (கே.விகுப்பம்), தனித்துணை ஆட்சியா் சி.மாறன், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் த.ராஜராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அலுவலா் சரவணன், மாவட்ட வழங்கல் அலுவலா் சரவணன், மாவட்ட சமூக நல அலுவலா் ஆா்.உமா, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலா் பாபு, உதவி ஆணையா் (கலால்) பொ.குணசேகரன், குடியாத்தம் கோட்டாட்சியா் எஸ்.சுபலட்சுமி, உள்ளி ஊராட்சி மன்றத் தலைவா் வி.ஜெய்சங்கா், குடியாத்தம் வட்டாட்சியா் எஸ்.பிரியா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments