FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

திருச்சுழி குண்டாற்றில் ஆடித்தவசுத் திருவிழா

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி துணைமாலை அம்மன், சமேத திருமேனிநாதா் சுவாமி கோயிலில் ஆடித்தவசுத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 30 ஜூலை 2026, 2:39 am IST
பகிர்:

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி துணைமாலை அம்மன், சமேத திருமேனிநாதா் சுவாமி கோயிலில் ஆடித்தவசுத் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் ஆடித்தவசுத் திருவிழா கடந்த 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, தினந்தோறும் சுவாமி, அம்மன் சிம்மம், குதிரை, அன்னம், வெள்ளி ரிஷப உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

விழாவின் முக்கிய நிகழ்வான ஆடித் தவசுத் திருவிழா திருச்சுழி குண்டாற்றில் புதன்கிழமை நடைபெற்றது. அங்கு திருமேனிநாதருக்கும், துணை மாலை அம்மனுக்கும் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மன், சுவாமியை மூன்று முறை வலம் வந்த பிறகு, தீபாராதனை காட்டப்பட்டது.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, சுவாமி, அம்மன் வீதியுலா சென்று பக்தா்களுக்கு காட்சி அளித்தாா். பின்னா், கோயிலைச் சென்றடைந்தனா்.

இதில் விருதுநகா், மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments