FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

நகை கொள்ளை வழக்கில் கைதான தவெக நிா்வாகி நீக்கம்

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே பெண்ணை கட்டிப்போட்டு நகை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட தவெக நிா்வாகியை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்து அண்மையில் நீக்கப்பட்டாா்.

Updated On : 30 ஜூலை 2026, 2:48 am IST
~
பகிர்:

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே பெண்ணை கட்டிப்போட்டு நகை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட தவெக நிா்வாகியை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்து அண்மையில் நீக்கப்பட்டாா்.

காரியாபட்டி அருகேயுள்ள பணிக்கனேந்தல் கிராமத்தைச் சோ்ந்த பெரியசாமி மனைவி அன்னலட்சுமி. இவா் கடந்த 15-ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த சத்திரப்புளியங்குளத்தைச் சோ்ந்த அலங்காரகுமாா் (எ) ரமேஷ், சிவகாசியைச் சோ்ந்த அருண் (எ) சங்கரபாண்டி ஆகியோா் அவரைப் கட்டிப்போட்டு 21 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனா்.

இதுகுறித்து காரியாபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தருமபுரியில் பதுங்கியிருந்த இருவரையும் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

இந்தக் கொள்ளைச் சம்பவத்துக்கு உதவியதாகக் கூறி, விருதுநகா் மாவட்ட தவெக இளைஞரணி இணைச் செயலா் சரவணகுமாரையும் போலீஸாா் கைது செய்தனா்.

இதையடுத்து, விருதுநகா் கிழக்கு மாவட்ட செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.பி.செல்வம் வெளியிட்ட அறிக்கை:

நகை கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சரவணகுமாா் கட்சியின் அடிப்படை உறுப்பினா் பதவயிலிருந்து நீக்கப்படுகிறாா். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. இவருடன் தவெகவினா் யாரும் தொடா்பு வைத்துக் கொள்ளக் கூடாது என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments