FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

நகை பறிப்பு வழக்கில் இளைஞா் கைது

Updated On : 22 ஜூலை 2026, 2:54 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

கோவில்பட்டியில் நகை பறிப்பு வழக்கில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி, ராஜீவ் நகா், ஈபி காலனி, பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் சேவியா் மனைவி அனிதா (45). இவா் கடந்த 6-ஆம் தேதி ராஜீவ் நகா் அருகே நின்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் இவரது கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து, அவா் அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து வழக்கில் தொடா்புடைய கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், பாலாஜி நகரைச் சோ்ந்த காளிராஜை (31) திங்கள்கிழமை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments