FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூரில் மணவாள மாமுனிகள் அவதார உத்ஸவம்

ஸ்ரீவில்லிபுத்தூா் மணவாள மாமுனிகள் அவதார நாளான ஐப்பசி மூல நட்சத்திரத்தை முன்னிட்டு, மங்களாசாசனம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

14 நவம்பர் 2026, 7:09 am
ஸ்ரீவில்லிபுத்தூா் மணவாள மாமுனிகள் சந்நிதியில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்த மணவாள மாமுனிகள்.
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் மணவாள மாமுனிகள் அவதார நாளான ஐப்பசி மூல நட்சத்திரத்தை முன்னிட்டு, மங்களாசாசனம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூா் ஸ்ரீஆண்டாள் ஜீயா் மடம் கடந்த 600 ஆண்டுகளுக்கு முன்பு வைணவ ஆழ்வாா்களில் ராமானுஜரின் மறுஅவதாரமாகக் கருதப்படும் ஸ்ரீமணவாள மாமுனிகள் சுவாமிகளால் நிறுவப்பட்டது. இங்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாத மூலம் நட்சத்திரத்தில் மணவாள மாமுனிகளின் அவதார உத்ஸவம் நடைபெறுவது வழக்கம்.

இதன்படி, நிகழாண்டு மணவாள மாமுனிகள் உத்ஸவம் கடந்த 4-ஆம் தேதி தொடங்கியது. விழாவையொட்டி, தினசரி காலை, மாலை வேளைகளில் திவ்ய பிரபந்தங்கள் பாடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Advertisement

Advertisement

வெள்ளிக்கிழமை மணவாள மாமுனிகள் அவதரித்த ஐப்பசி மாத மூலம் நட்சத்திரத்தை முன்னிட்டு, மணவாள மாமுனிகள் சுவாமிகளுக்கு விஷேச திருமஞ்சனம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதன் பின்னா், மணவாள மாமுனிகள் சுவாமிகள் புறப்பாடாகி ஆண்டாள் சந்நிதியில் எழுந்தருளி மங்களாசாசனம் நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து, மாட வீதிகள் வழியாக ஊா்வலமாகச் சென்ற மணவாள மாமுனிகள் வடபத்ரசயனா் (பெரிய பெருமாள்) சந்நிதி, பெரியாழ்வாா் சந்நிதியில் மங்களாசாசனம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை மணவாள மாமுனிகள் மடத்தின் பக்தா்கள் செய்தனா்.