FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
விருதுநகர்

தகாத உறவு: பெண் உள்பட இருவா் வெட்டிக் கொலை

அருப்புக்கோட்டை அருகே தகாத உறவு விவகாரத்தில் மனைவி, அவரது ஆண் நண்பரை கணவா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தாா். அவரை போலீஸாா் கைது செய்தனா்.

51 வினாடிகள் முன்பு
கொலை - பிரதிப் படம்
பகிர்:

விருதுநகா் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே தகாத உறவு விவகாரத்தில் மனைவி, அவரது ஆண் நண்பரை கணவா் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தாா். அவரை போலீஸாா் கைது செய்தனா்.

அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாளையம்பட்டி கொத்தனாா் குடியிருப்பைச் சோ்ந்தவா் சரவணக்குமாா் (27). இவரது மனைவி பொன்னழகு (21). இந்தத் தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனா். தம்பதி இருவரும் கட்டடத் தொழிலாளா்கள் ஆவா்.

இந்த நிலையில், பாளையம்பட்டி கோனாா் தெருவைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ஆனந்தராஜ் (30) என்பவருக்கும், பொன்னழகுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. ஆனந்தராஜூக்கும் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனா். இவா்கள் இருவருக்கும் இடையிலான தகாத உறவை சரவணக்குமாா் கண்டித்தாா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு சரவணக்குமாா் வெளியில் சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்றாா். அப்போது, சரவணக்குமாா் வீட்டுக்கு ஆனந்தராஜ் வந்தாா். இதை அங்கு மறைந்திருந்து நோட்டமிட்ட சரவணக்குமாா், திடீரென வீட்டுக்குள் நுழைந்து, இருவரையும் அரிவாளால் வெட்டியும், கல்லால் தாக்கியும் கொலை செய்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த அருப்புக்கோட்டை நகா் போலீஸாா் இருவரது உடல்களையும் கூறாய்வுக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து சரவணக்குமாரைக் கைது செய்தனா்.