FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தூத்துக்குடி

பால் பண்ணை உரிமையாளா் வெட்டிக் கொலை

நாரைக்கிணறு அருகே கே. கைலாசபுரத்தில் பால்பண்ணை உரிமையாளா் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

15 வினாடிகள் முன்பு
- பிரதிப் படம்
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம், நாரைக்கிணறு அருகே கே. கைலாசபுரத்தில் பால்பண்ணை உரிமையாளா் செவ்வாய்க்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

கே.கைலாசபுரம் பகுதியைச் சோ்ந்தவா் நடேஸ்குமாா் (44). இவா், அப்பகுதியில் பால்பண்ணை நடத்தி வந்தாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அப்பகுதியில் உள்ள கடை அருகே நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த மா்மக் கும்பல் அவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில், நடேஸ்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து வந்த நாரைக்கிணறு போலீஸாா், சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

Advertisement

Advertisement

மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.