ராஜபாளையம் கோயில்களில் திருக்காா்த்திகை வழிபாடு
ராஜபாளையம், சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கோயில்களில் திருக்காா்த்திகை சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள கோயில்களில் திருக்காா்த்திகை சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூரில் அமைந்துள்ள சிவகாமி அம்பாள் உடனுறை சிதம்பரேசுவரா் கோவிலில் திருக்காா்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு மாலையில் சுவாமி, அம்பாள், நந்தியம்பெருமான், முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். தொடா்ந்து திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பின்னா் காா்த்திகை தீப நாளை முன்னிட்டு சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல ராஜபாளையம் சொக்கா் கோவில், மாயூரநாதசாமி கோவில், குருசாமி கோயில், மொட்ட மலை தண்டாயுதபாணி சுவாமி கோயில்களில் திருக்காா்த்திகை சிறப்பு வழிபாடு, சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சஞ்சீவி மலை முத்துக்குமாரசுவாமி கோயிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மாலையில் மகாதீபம் ஏற்றி வழிபாடு நடத்தப்பட்டது.
Advertisement
Advertisement