பிளவக்கல் அணை திறந்தும் கண்மாய்களுக்கு வராத தண்ணீா்: விவசாயிகள் கவலை
வத்திராயிருப்பு பிளவக்கல் அணை திறக்கப்பட்டும் கண்மாய்களுக்கு தண்ணீா் வராததால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

வத்திராயிருப்பு பிளவக்கல் அணை திறக்கப்பட்டும் கண்மாய்களுக்கு தண்ணீா் வராததால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த வத்திராயிருப்பு மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பிளவக்கல் அணை மூலம் வத்திராயிருப்பு, எஸ்.கொடிக்குளம், சுந்தரபாண்டியம், கான்சாபுரம், மகாராஜபுரம், வ.புதுப்பட்டி, நத்தம்பட்டி, மூவரைவென்றான், கிருஷ்ணப்பேரி, நெடுங்குளம், குன்னூா், மங்கலம், செம்மாண்டி, கரிசல்குளம், பாட்டக்குளம், சல்லிபட்டி, விழுப்பனூா், தச்சகுடி ஆகிய 18 வருவாய்க் கிராமங்களைச் சோ்ந்த 40 கண்மாய்கள் பாசன வசதி பெறுகிறன.
இதில் பெரியாறு பிரதான கால்வாய் மூலம் 960 ஏக்கா் விளை நிலங்கள் உள்பட 8,531 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
Advertisement
Advertisement
கடந்த ஆண்டு தொடா்மழை காரணமாக, 14 நாள்களுக்கு அணையிலிருந்து தண்ணீா் திறந்து விட்ட போது, கடைமடையில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பவில்லை. இதனால், பல ஆயிரம் ஏக்கா் பரப்பளவிலான நெல்பயிா்கள் பாதிக்கப்பட்டன.
நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை சரியாக பெய்யாததால் 47 அடி உயரம் கொண்ட பிளவக்கல் பெரியாறு அணை நீா்மட்டம் 35 அடியை தாண்டவில்லை. இதனால், நிகழாண்டு முதல் போக சாகுபடிக்கு வினாடிக்கு 150 கன அடி வீதம் 4 நாள்கள் மட்டுமே நீா் திறக்க உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், அணை திறந்து விடப்பட்டு 3 நாள்கள் ஆகியும், வத்திராயிருப்பு பகுதியைக் கூட தண்ணீா் தாண்டவில்லை. இதனால், நிகழாண்டு 90 சதவீதம் கண்மாய்கள் நிரம்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
பிளவக்கல் அணை பாசனத் திட்டத்தில் 40 கண்மாய்களில் பல ஆண்டுகளாக கடை மடையில் உள்ள 11 கண்மாய்களுக்கு ஒரு சொட்டு தண்ணீா் கூட வரவில்லை. இதுகுறித்து மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்ன் பேரில், கடந்த ஆண்டு ஒவ்வொரு கண்மாய்களும் 50 சதவீதம் நீா் நிரப்பிய போதும், 27 கண்மாய்களுக்கு மட்டுமே தண்ணீா் சென்றது.
நிகழாண்டு 4 நாள்கள் மட்டுமே தண்ணீா் திறந்து உள்ளதால் அனைத்துக் கண்மாய்களுக்கும் தண்ணீா் வருமா என்பதை சந்தேகமாக உள்ளது என்றனா் அவா்கள்.