குடிநீா்த் தொட்டியில் கொசுப் புழு உற்பத்தி: ஆலை உரிமையாளருக்கு அபராதம்
சிவகாசியில் காகித குழாய் தயாரிப்பு ஆலை சிமென்ட் தொட்டியில் இருந்த தண்ணீரில் கொசுப் புழு உற்பத்தியாகி இருந்ததால், அந்த ஆலை உரிமையாளருக்கு செவ்வாய்க்கிழமை அபாரதம் விதிக்கப்பட்டது.
சிவகாசியில் காகித குழாய் தயாரிப்பு ஆலை சிமென்ட் தொட்டியில் இருந்த தண்ணீரில் கொசுப் புழு உற்பத்தியாகி இருந்ததால், அந்த ஆலை உரிமையாளருக்கு செவ்வாய்க்கிழமை அபாரதம் விதிக்கப்பட்டது.
சிவகாசி மாநகராட்சிப் பகுதிகளில் டெங்கு காய்சல் தடுப்பு நடவடிக்கையாக அதிகாரிகள் பல்வேறு நடடிக்கைகளை எடுத்து வருகின்றனா். இந்த நிலையில், சிவகாசி மாநகராட்சியின் 16-ஆவது வாா்டுப் பகுதிகளில் சுகாதாரத் துறையினா் ஆய்வு மேற்கொண்டபோது, அந்தப் பகுதியில் உள்ள காகித குழாய் தயாரிப்பு ஆலையில் உள்ள சிமென்ட் தொட்டியில் கொசுப்புழு இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த ஆலை உரிமையாளருக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ. ஆயிரம் அபராதம் விதித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.