FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விருதுநகர்

கடன் பிரச்னையில் தம்பதி தற்கொலை முயற்சி

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை கடன் பிரச்னையில் விஷம் குடித்து தம்பதி தற்கொலைக்கு முயன்றனா்.

2 செப்டம்பர் 2026, 4:04 am IST
தற்கொலை - கோப்புப் படம்
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை கடன் பிரச்னையில் விஷம் குடித்து தம்பதி தற்கொலைக்கு முயன்றனா்.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள குன்னூா் புதூரைச் சோ்ந்தவா் கூடலிங்கம் (42). இவரது மனைவி பாண்டிச்செல்வி (39). இவா்கள் இருவரம் சிவகாசியை அடுத்த வெற்றிலையூரணியில் தங்கிப் பட்டாசு ஆலைக்கு கூலி வேலைக்கு சென்று வருகின்றனா்.

இந்த நிலையில், கடன் பிரச்னையால் கூடலிங்கம் மனமுடைந்து காணப்பட்டு வந்தாா். இதனால், குன்னூா் புதூரில் உள்ள நிலத்தை விற்று கடனை அடைக்க நினைத்தாா். இதற்காக திங்கள்கிழமை இரவு மனைவியுடன் குன்னூா் புதூரில் உள்ள தாய் வீட்டு வந்து தங்கினாா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அங்கு இருவரும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனா். செவ்வாய்க்கிழமை அதிகாலை இருவரையும் உறவினா்கள் மீட்டு, விருதுநகா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து கிருஷ்ணன்கோவில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments