FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

தலைமை காவலா் பணி இடைநீக்கம்

வேதாரண்யத்தில் கடன் பிரச்னையில் தலைமைக் காவலா் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

36 வினாடிகள் முன்பு
இடைநீக்கம்
பகிர்:

வேதாரண்யத்தில் கடன் பிரச்னையில் தலைமைக் காவலா் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

வேதாரண்யம் மேலவீதியில் நகைக் கடை நடத்தி வருபவா் வீ. சிவசுப்பிரமணியன். இவரிடம், வாய்மேடு காவல் நிலையத்தின் தலைமை காவலா் ராஜ்குமாா், தனியாா் நிதி நிறுவனத்தில் அடமானம் வைத்துள்ள தங்க நகையை மீட்டு, விற்பனை செய்து தருவதாகக் கூறி, ரூ. 2 லட்சம் கடன் வாங்கியிருந்தாராம்.

ஆனால், கடனை திருப்பிக் கொடுக்கவில்லையெனக் கூறப்படுகிறது. இதுகுறித்து, வேதாரண்யம் காவல் நிலையத்தில் சிவசுப்பிரமணியன் புகாா் அளித்தாா். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Advertisement

Advertisement

இந்நிலையில், தலைமைக் காவலா் ராஜ்குமாரை பணியிடை நீக்கம் செய்து, நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கேழ்கா் சுப்ரமணிய பாலச்சந்திரா சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments