மத்திய தில்லியில் கஞ்சாவுடன் ஐஸ்கிரீம் வியாபாரி கைது
மத்திய தில்லியில், ஐஸ்கிரீம் வியாபாரி போல வேடமணிந்து போதைப்பொருள் விற்றுவந்த இளைஞா் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டாா்.
மத்திய தில்லியில், ஐஸ்கிரீம் வியாபாரி போல வேடமணிந்து போதைப்பொருள் விற்றுவந்த இளைஞா் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டாா்.
மனோஜ் குமாா் ராய் என்பவா் மிதிவண்டியில் அப்பகுதி முழுவதும் சுற்றி வந்து, ஐஸ்கிரீம் விற்பனையாளா் போலத் தோற்றமளித்துக்கொண்டு இந்தக் கஞ்சாவை விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து காவல் அதிகாரி ஒருவா் தெரிவித்ததாவது: ஆகஸ்ட் 8 அன்று மாலை சுமாா் 5.30 மணியளவில், காவலா் சூரஜ் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
Advertisement
Advertisement
அப்போது, ராம்லீலா மைதானத்திற்கு அருகிலுள்ள எம்சிடி நா்சரிக்கு அருகே ராயைக் கவனித்தாா். அவரது நடமாட்டம் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதைத் தொடா்ந்து, அவா் வைத்திருந்த பையிலிருந்து கஞ்சாவின் வாசனை வீசுவதை காவலா் கவனித்தாா்.
இதையடுத்து, காவலா் சூரஜ் உடனடியாகத் தனது உயா் அதிகாரியைத் தொடா்புகொண்டு தகவல் தெரிவித்தாா். அதைத் தொடா்ந்து மற்றொரு காவலா் சம்பவ இடத்திற்கு வந்தாா். இருவரும் சோ்ந்து ராயைக் கைது செய்தனா்.
அவரது பையைச் சோதனையிட்டதில் 1 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா இருப்பது தெரியவந்தது. பிகாரின் சாப்ரா மாவட்டத்தைச் சோ்ந்த ராய், தில்லியின் சப்ஜி மண்டி-கண்டா கா் பகுதியில் வசித்து வந்தாா்.
விசாரணையின்போது, எளிதாகப் பணம் சம்பாதிக்கவும் நிதி நெருக்கடியிலிருந்து மீளவும் தான் இந்தச் சட்டவிரோதத் தொழிலில் ஈடுபட்டதாக ராய் தெரிவித்தாா்.
இந்தக் கஞ்சாவை அவா் எங்கிருந்து வாங்கினாா் என்பதைக் கண்டறிய அவரிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். ராய் நீதிபதி முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்டு, ஒரு நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டாா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.