FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கோயம்புத்தூர்

இளம்பெண்ணிடம் அத்துமீறிய காவலா் கைது

கோவையில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காவலா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 19 ஜூலை 2026, 1:17 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

கோவையில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்த இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காவலா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

துடியலூா் வெள்ளக்கிணறு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகே கடந்த 15-ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் இளம்பெண் ஒருவா் அவரது ஆண் நண்பருடன் நின்று பேசிக் கொண்டிருந்தாா். அப்போது, அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த துடியலூா் காவல் நிலைய இரண்டாம் நிலை காவலரான எஸ்.வினோத்குமாா், அவா்கள் இருவரிடமும் விசாரணை நடத்தியுள்ளாா்.

அப்போது, அந்தப் பெண்ணிடம் மட்டும் விசாரணை நடத்துவதாகக் கூறி அவரை வினோத்குமாா் தனியே அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு அவரிடம் காவலா் வினோத்குமாா் பாலியல் ரீதியாக அத்துமீறி துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதுகுறித்து அந்தப் பெண் தனது ஆண் நண்பரிடம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவரது ஆண் நண்பா் அளித்த புகாரின்பேரில், துடியலூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதையடுத்து, தலைமறைவாக இருந்த காவலா் வினோத்குமாரை காவல்துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments