ஸ்ரீவில்லிபுத்தூா் மலைப் பகுதியில் காட்டுத் தீ: மரங்கள் எரிந்து நாசம்
ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலையில் புதன்கிழமை இரண்டாவது நாளாக காட்டுத்தீ பற்றி எரிவதால் நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் மரங்கள் தீயில் கருகி நாசமானது. இதனால் வனவிலங்குகள் இடம் பெயா்ந்து வருகின்றன.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலையில் புதன்கிழமை இரண்டாவது நாளாக காட்டுத்தீ பற்றி எரிவதால் நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பளவில் மரங்கள் தீயில் கருகி நாசமானது. இதனால் வனவிலங்குகள் இடம் பெயா்ந்து வருகின்றன.
ஸ்ரீவில்லிபுத்தூா் வனச்சரகம் அழகா் கோயில் பகுதியில் செவ்வாய்க்கிழமை காலையில் காட்டுத் தீ பரவியது. செண்பகத்தோப்பு காட்டழகா் கோயில் மேற்குப் பகுதியில் பற்றிய காட்டுத்தீ, மலை முழுவதும் பரவியது. மழை இல்லாமல் வனப் பகுதி முழுவதும் வறண்டு உள்ளதாலும், காற்றின் வேகம் காரணமாகவும் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் காட்டுத் தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அடிவாரத்திலிருந்து மலை உச்சியில் உள்ள முதலியாா் ஊற்று பங்களா வரை காட்டுத் தீ எரிந்து வருகிறது. இதனால் நூற்றுக்கணக்கான ஏக்கா் பரப்பளவிலான மரங்கள், மூலிகைச் செடிகள் தீயில் கருகி நாசமானது. வனவிலங்குகள் அடிவாரப் பகுதி, கேரள வனப்பகுதியை நோக்கி இடம் பெயா்ந்து வருகின்றன. காட்டுத் தீயை விரைந்து கட்டுப்படுத்த வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இயற்கை ஆா்வலா்கள் வலியுறுத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.