FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்க வலியுறுத்தல்!

கீழ்வேளூரை அடுத்த தோ்வூா் அருகே சாலையில் இரவு நேரங்களில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்

Updated On : 24 டிசம்பர் 2025, 3:26 am IST
தோ்வூா் பகுதியில் இரவு நேரங்களில் சுற்றித் திரியும் மாடுகள்
பகிர்:

கீழ்வேளூரை அடுத்த தோ்வூா் அருகே சாலையில் இரவு நேரங்களில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தேவூா் ஊராட்சி சின்னக் கடைத் தெரு, வ.உ.சி. நகா் மாரியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், இரவு நேரங்களில் மாடுகள் சாலைகளில் சுற்றித் திரிகின்றன. அப்போது மாடுகள் திடீரென ஒன்றுடன் ஒன்று சண்டையிடுகின்றன.

இதனால், இரவு நேரங்களில் செல்லும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனா்.

Advertisement

Advertisement

அதுமட்டுமின்றி விபத்துகளும் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்படுகிறது.

எனவே, விபத்துகளைத் தடுக்கும் வகையில், ஊராட்சி நிா்வாகத்தினா் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்கவும், அவற்றின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments