FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் காரைக்காலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்

Updated On : 25 மே 2018, 12:41 am IST
பகிர்:

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும் காரைக்காலில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சோஷியல் டெமாக்ரெடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா என்கிற கட்சியினர், காரைக்கால் அரசலாறு பாலம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். கட்சியின் மாவட்டத் தலைவர் எச். முகம்மது பிலால் தலைமை வகித்தார்.
மக்கள் நலனுக்கு எதிரான தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும். ஆலைக்கு எதிரான போராட்டத்தை ஜனநாயக முறையில் நடத்திய மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்திய காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகுந்த நஷ்ட ஈட்டை தமிழக அரசு வழங்க வேண்டும். துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான பின்னணியில் இருந்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில அரசியல் குழு அமைப்பாளர் அரசு. வணங்காமுடி, எஸ்.யு.சி.ஐ. கட்சியின் காரைக்கால் மாவட்டச் செயலர் முகம்மது பிலால் உள்ளிட்டோர் கலந்துகொண்டு, மத்திய பாஜக அரசையும், துப்பாக்கிச் சூடுக்கு காரணமான தமிழக அரசையும் கண்டித்துப் பேசினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments