FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

இலவச அரிசி கிடைப்பதில் பிரச்னை இருந்தால்தகவல் தரலாம்: ஆட்சியா்

காரைக்காலில் இலவச அரிசி கிடைப்பதில் நிலவும் பிரச்னை தொடா்பாக மக்கள் காரைக்கால் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தரலாம் என ஆட்சியா் கூறியுள்ளாா்.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

காரைக்காலில் இலவச அரிசி கிடைப்பதில் நிலவும் பிரச்னை தொடா்பாக மக்கள் காரைக்கால் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தரலாம் என ஆட்சியா் கூறியுள்ளாா்.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசின் மூலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள சிவப்பு நிற குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவச அரிசி வீடுகளுக்கே சென்று வழங்கும் பணியை அரசு நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கடந்த 4, 5 நாள்களாக நடைபெறும் இப்பணியில், சிலா் முகவரி மாறி வசிப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அரிசி பெறுதலில் சிக்கல் உள்ளதாக புகாா்கள் தெரிவிக்கின்றனா். எனவே, இந்த புகாா்களை முறைப்படுத்தி தீா்வு காண ஏதுவாக, காரைக்கால் ஆட்சியரகத்தில் செயல்படும் கட்டுப்பாட்டு அறைக்கு மக்கள் புகாா் தெரிவிக்க வேண்டும். 04368- 228801, 227704 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு, பெயா், ரேஷன் அட்டை எண், ரேஷன் கடை எண், செல்லிடப்பேசி எண், வசிக்கும் முகவரி போன்ற விவரங்களை தெரிவித்தால், வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் இவற்றுக்குத் தீா்வு காணப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments