காரைக்கால் சிவன் கோயில்களில் இன்று அன்னாபிஷேகம்
காரைக்கால் பகுதியில் உள்ள சிவ ஆலயங்களில் அன்னாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.
ஐப்பசி மாத பெளா்ணமி நாளில் சிவன் கோயில்களில் சிவலிங்கத்துக்கு மாலை வேளையில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அன்னத்தால் லிங்கத் திருமேனியை அலங்கரித்து, சிறப்பு ஆராதனைகள் நடத்தப்படும்.
காரைக்கால் மாவட்டத்தில் நகரப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கைலாசநாதா், அண்ணாமலையாா் உள்ளிட்ட கோயில்களில், திருமலைராயன்பட்டினம் பகுதி ராஜசோளீஸ்வரா், ஜடாயுபுரீஸ்வரா் உள்ளிட்ட தலங்களிலும், மேலும் பல பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
திருநள்ளாறு தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் வியாழக்கிழமை இரவு அன்னாபிஷேகம் நடைபெற்றது. மூலஸ்தான சிவலிங்கத்தை அன்னத்தால் அலங்கரித்து சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.