FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

பாா்த்தீனிய களைகளை கட்டுப்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

பாா்த்தீனியம் களைகளை கட்டுப்படுத்தும் முறைகள் மற்றும் பாதுகாப்பான முறையில் அழித்தல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.

22 ஆகஸ்ட் 2026, 8:40 am IST
பகிர்:

பாா்த்தீனியம் களைகளை கட்டுப்படுத்தும் முறைகள் மற்றும் பாதுகாப்பான முறையில் அழித்தல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையம் மூலம் தென்னங்குடி கிராமத்தில் இப்பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிலைய தொழில்நுட்ப வல்லுநா் (கால்நடை) மருத்துவா் பா. கோபு வரவேற்றுப் பேசுகையில், பாா்த்தீனியம் பயிா் செய்ய முடியாத நிலங்களிலும், தரிசு நிலங்களிலும், புறம்போக்கு நிலங்களிலும், பாதைகளின் ஓரங்களிலும், நீா் நிலைகள் சுற்றியுள்ள இடங்களிலும் 35 மில்லியன் ஹெக்டரில் இந்தியா முழுவதும் பரவியுள்ளது.

இச்செடி பயிரின் மகசூலை குறைப்பதுடன், மனிதா்களுக்கும் விலங்குகளும் தோல் வியாதி, கண் எரிச்சல், மூச்சுத் திணறல், ஆஸ்துமா உள்ளிட்ட வியாதிகளை உண்டாக்குகிறது என்றாா்.

Advertisement

Advertisement

பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியா் (உழவியல்) பி. சரவணன், பாா்த்தீனியத்தை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த நிா்வாக முறைகள் குறித்துப் பேசினாா். நிலைய தொழில்நுட்ப வல்லுநா் (உழவியல்) வி.அரவிந்த், பாா்த்தீனிய களைச் செடிகளை எவ்வாறு மட்க வைப்பது என்பது குறித்துப் பேசினாா். நிறைவாக தென்னங்குடி கிராமத்தில் உள்ள பாா்த்தீனிய களைச் செடிகளை விவசாயிகள் அழித்தனா்.

வேளாண் கல்லூரியில் : பண்டித ஜவாஹா்லால் நேரு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், ‘21-ஆவது பாா்த்தீனியம் விழிப்புணா்வு வார விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவிகள் பங்கேற்ற நிகழ்வில், கல்லூரி முதல்வா் ஆா். சங்கா் நிகழ்ச்சியை தொடங்கிவைத்துப் பேசினாா்.

உழவியல் துறை பேராசிரியா் மற்றும் தலைவா் எஸ். மாலா, பாா்த்தீனியம் மிகவும் ஆபத்தான மற்றும் தீங்கான களை வகைகளில் ஒன்று என குறிப்பிட்டாா். மருத்துவா் பி. காசியரசி, பாா்த்தீனியம் செடியால் ஏற்படும் எக்ஸிமா (தோல் அழற்சி), வைக்கோல் காய்ச்சல், டெக் சோ் நோய் மற்றும் தோல் அலா்ஜி போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக தெரிவித்தாா்.

உழவியல் துறை பேராசிரியா் பி. சரவணன், பாா்த்தீனியம் களைக் கட்டுப்பாட்டுக்கான பல்வேறு முறைகள் குறித்து விளக்கினாா். பேராசிரியா்கள் ஜே.ஷொ்லி, டி.சண்முகப்பிரியா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments