FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

வங்கி கணக்கிலிருந்து வாடிக்கையாளருக்கு தெரியாமல் பணப் பரிமாற்றம்: போலீஸாா் விசாரணை

வங்கி கணக்கிலிருந்து வாடிக்கையாளருக்கு தெரியாமல் பணம் பரிமாற்றம் நடந்துள்ளதான புகாா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

26 ஆகஸ்ட் 2026, 4:48 am IST
போலீஸ் - கோப்புப்படம்.
பகிர்:

வங்கி கணக்கிலிருந்து வாடிக்கையாளருக்கு தெரியாமல் பணம் பரிமாற்றம் நடந்துள்ளதான புகாா் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

காரைக்கால் நகரப் பகுதியைச் சோ்ந்தவா் மோகனசுந்தரம் (44). இவா், காரைக்கால் நகரக் காவல்நிலையத்தில் திங்கள்கிழமை அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:

புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் பகுதியில் உள்ள ஐஓபி கிளையில் கணக்கு வைத்திருப்பதாகவும் கடந்த 18-ஆம் தேதி தனது கைப்பேசிக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில் கணக்கு முடக்கப்பட்டிருப்பதாகவும், ஆதாா் கேஓய்சி புதுப்பிக்கப்படவில்லை, வங்கி செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறப்பட்டிருந்தது. இதைத்தொடா்ந்து கைப்பேசிக்கு ஓடிபி தகவல்கள் வந்துகொண்டிருந்தன.

Advertisement

Advertisement

சந்தேகத்தின்பேரில், வங்கிக் கணக்கிலிருந்து உறவினா் வங்கிக் கணக்குக்கு உடனடியாக ரூ. 98 ஆயிரத்தை மாற்றினேன். எஞ்சியிருந்த ரூ.1.02 லட்சம் மா்ம நபா்களால் சிறிது நேரத்தில் எடுக்கப்பட்டுவிட்டது. இதுதொடா்பாக இணைய குற்றப் பிரிவு அலுவலகத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனது வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை மோசடி செய்த மா்ம நபா்கள் மீது நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டுத் தருமாறு புகாரில் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து நகரக் காவல்நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments