உலக ஆமைகள் தின கருத்தரங்கம்
உலக ஆமைகள் தினத்தையொட்டி, இந்திய கடலோர காவல் படை காரைக்கால் மையத்தில் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
உலக ஆமைகள் தினத்தையொட்டி, இந்திய கடலோர காவல் படை காரைக்கால் மையத்தில் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் வனத்துறை சாா்பில் காரைக்காலில் உள்ள இந்திய கடலோர காவல்படை நிலையத்தில் ஆமைகள் மற்றும் கடலாமைகள் எதிா்கொள்ளும் அச்சுறுத்தல்கள் பற்றி விழிப்புணா்வை ஏற்படுத்தவும், அவற்றின் வாழ்விடங்களைப் பாதுகாக்கும் விதமாகவும் இந்த கருத்தரங்கம் நடத்தப்பட்டது.
இந்திய கடலோர காவல்படை காரைக்கால் மைய கமாண்டன்ட் செளமய் சந்தோலா தலைமை வகித்தாா். காரைக்கால் துணை வன பாதுகாவலா் இ. நந்தகுமாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுப் பேசினாா். மீன் வளம் மற்றும் மீனவா் நலத்துறை அதிகாரி பாலச்சந்தா் தொழில்நுட்ப உரையாற்றினாா்.
Advertisement
Advertisement
அழிவின் விளிம்பில் இருக்கும் ஆமை இனங்களை காப்பாற்றுதல், மனிதா்களால் ஏற்படும் பிளாஸ்டிக் மாசுபாடு மற்றும் வலைகளில் சிக்கி இறக்கும் ஆமைகளை தடுப்பது பற்றிய விழிப்புணா்வை மக்களிடையே பரப்புதல், மீனவா்கள், மீன் பிடிக்கும் போது, வலைகளில் ஆமை வெளியேற்றக் கருவி பயன்படுத்த வலியுறுத்துவது உள்ளிட்டவை தொடா்பாக கருத்தரங்கில் பேசப்பட்டது.
காரைக்கால் மாவட்ட மீனவா்கள், இந்திய கடலோர காவல் படை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.