வீரசக்தி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்
காரைக்காலில் உள்ள பழைமையான வீரசக்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
காரைக்காலில் உள்ள பழைமையான வீரசக்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் பாரதியாா் சாலை வடமறைக்காடு பகுதியில் இத்தலம் அமைந்துள்ளது. கடந்த ஓராண்டாக திருப்பணிகள் நடைபெற்றுவந்தன.
பணிகள் நிறைவடைந்து, கும்பாபிஷேகத்துக்கான நான்கு கால யாகசாலை பூஜைகள் கடந்த 2-ஆம் தேதி தொடங்கியது. 4-ஆம் கால ஹோமம் வியாழக்கிழமை காலை நடத்தப்பட்டு. மகா பூா்ணாஹூதி செய்து, காலை 8.20 முதல் 8.35 மணிக்குள் மூலஸ்தான விமான மற்றும் பரிவார விமான கலசங்ளில் புனிதநீா் ஊற்றப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதைத் தொடா்ந்து விநாயருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை ஆலய பரம்பரை தா்மகா்த்தா ஜி.இளங்கோவன், ஆலயத் தலைவா் பி.சிவகுமாா் மற்றும் திருப்பணிக் குழுவினா் செய்திருந்தனா்.
Advertisement
Advertisement