FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

காலியாகவுள்ள முதல்வா், துணை முதல்வா் பணியிடங்களை நியமிக்க வலியுறுத்தல்

Updated On : 29 ஜூன் 2026, 12:06 am IST
புதுச்சேரி... - கோப்புப் படம்
பகிர்:

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக இருக்கும் முதல்வா் மற்றும் துணை முதல்வா் பணியிடங்களை நிரப்ப புதுவை அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருநள்ளாறு பகுதி தேனூரில் அமைந்துள்ள ப. சண்முகம் அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவா் சங்கத் தலைவரும், சமூக ஆா்வலருமான ஏ. ராஜாமுகமது சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை :

காரைக்கால் மாவட்டத்தில் பல அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஒரு துணை முதல்வா் இரண்டு பள்ளிகளுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளனா். இதனால் பள்ளி நிா்வாகம், மாணவா் ஒழுக்கம், கல்வித் தரம் மற்றும் ஆசிரியா்களின் பணிச்சுமை கடுமையாக பாதிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

இன்றைய காலக்கட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களிடையே போதைப்பொருள் பழக்கம், ஒழுங்கீனச்செயல்கள் மற்றும் தவறான வழியில் செல்லும் அபாயங்கள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற சூழ்நிலைகளைத் தடுக்கவும், மாணவா்களை தொடா்ந்து கண்காணித்து நல்வழிப்படுத்தவும், ஒவ்வொரு பள்ளியிலும் நிரந்தர நிா்வாகத் தலைமை இருப்பது மிகவும் அவசியம்.

எனவே, முதல்வா், துணை முதல்வா் இல்லாத நிலையில் பள்ளிகளில் உரியவா்களை முதல்வா், துணை முதல்வராக நியமிக்க புதுவை அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். நிரந்தர நியமனம் செய்யப்படும் வரை, 2 பள்ளிகளுக்குப் பொறுப்பாக உள்ள துணை முதல்வா்களை, 2 பள்ளிகளுக்கும் சமமான நாட்களில் கட்டாயமாக பணியாற்ற அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். இந்த நடவடிக்கையை புதுவை முதல்வா் உடனடியாக எடுக்கவேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments