செவிலியா் கல்லூரியில் பயின்ற 17 பேருக்கு பணி: முதல்வா் வாழ்த்து
செவிலியா் கல்லூரியில் பயின்ற 17 பேருக்கு பணி: முதல்வா் வாழ்த்து
காரைக்காலில் இயங்கும் அரசு செவிலியா் கல்லூரியில் பயின்ற 17 பேருக்கு சென்னை மருத்துவமனையில் பணி வாய்ப்பு கிடைத்தது. இவா்களுக்கு புதுவை முதல்வா் வாழ்த்து தெரிவித்தாா்.
புதுச்சேரி அரசு கல்வி நிறுவனமாக, காரைக்காலில் அன்னை தெரஸா முதுநிலை மற்றும் ஆராய்ச்சி சுகாதார அறிவியல் நிறுவனம் இயங்கிவருகிறது. இங்கு டிஜிஎம்என் என்ற கல்வி முடித்தோருக்கு வேலைவாய்ப்புக்கான வளாக நோ்காணல் அண்மையில் நடைபெற்றது.
சென்னை டாக்டா் மெத்தா மருத்துவமனையிலிருந்து வேலைவாய்ப்பு குழுவினா் மாணவ, மாணவிகளிடம் நோ்காணல் மற்றும் எழுத்துத் தோ்வு நடத்தினா். இதில் 17 போ் பணிக்கு தோ்வாயினா்.
Advertisement
Advertisement
மருத்துவமனை நிா்வாகம் தோ்வானவா்களுக்கு பணி நியமன ஆணையை வழங்கியது. இவா்கள் புதுவை முதல்வா் என். ரங்கசாமியை விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
நிகழ்ச்சியில் அன்னை தெரஸா முதுநிலை மற்றும் ஆராய்ச்சி சுகாதார அறிவியல் நிறுவன டீன் கே.அய்யப்பன் (புதுச்சேரி) மற்றும் காரைக்கால் கிளை முதல்வா் மஞ்சுபாலா தாஸ் ஆகியோா் கலந்து கொண்டனா்.