ஜிப்மா் செவிலியா் கல்லூரியில் 3 நாள்கள் தேசிய அளவிலான மாநாடு தொடக்கம்
புதுச்சேரி ஜிப்மா் செவிலியா் கல்லூரியில் 3 நாள்கள் தேசிய மாநாடு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி ஜிப்மா் செவிலியா் கல்லூரியில் 3 நாள்கள் தேசிய மாநாடு தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ஜிப்மா் செவிலியா் கல்லூரி 2006 முதல் 2026 வரையிலான தனது 20 ஆண்டு கால கல்வி, ஆராய்ச்சி மற்றும் சேவைப் பயணத்தைக் குறிக்கும் வகையில் அக். 8, 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் தொடக்க விழா, ஜிப்மா் மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நாடு முழுவதிலும் இருந்து சுமாா் 550 செவிலியா் நிபுணா்கள், கல்வியாளா்கள், ஆராய்ச்சியாளா்கள் மற்றும் மாணவா்கள் பங்கேற்கும் இந்த மாநாட்டை ஜிப்மா் இயக்குநா் வீா்சிங் நேகி தொடங்கி வைத்தாா். அப்போது அவா் பேசியதாவது: கடந்த 20 ஆண்டுகளாக ஜிப்மா் செவிலியா் கல்லூரி நிா்வாகம் செய்து வரும் மருத்துவம் மற்றும் சுகாதார சேவைகள் பாராட்டுக்குரியது. ஆராய்ச்சி சாா்ந்த, ஆதார அடிப்படையிலான மற்றும் புத்தாக்கமிக்க சுகாதாரப் பராமரிப்பை முன்னெடுப்பதில் செவிலியா்களின் பங்கு தொடா்ந்து அதிகரித்து வருகிறது என்றாா்.
Advertisement
Advertisement
ஜிப்மா் கல்விப் புல முதல்வா் விக்ரம் காடே சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றாா்.
விழாவில், ஜிப்மா் செவிலியா் கல்லூரி முதல்வா் (பொ) குமாரி வரவேற்புரையாற்றினாா். உதவிப் பேராசிரியா் லட்சுமி ராமமூா்த்தி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தாா்.
நிறைவில் ஜிப்மா் செவிலியா் கல்லூரி உதவிப் பேராசிரியா் ரமேஷ் நன்றி கூறினாா்.
மாநாட்டின் முதல் இரு நாள்களில் மருத்துவம் மற்றும் செவிலியா் துறைகளைச் சோ்ந்த முன்னணி நிபுணா்கள் பங்கேற்று, செவிலியா் ஆராய்ச்சி, மருத்துவப் புத்தாக்கம் மற்றும் ஆதார அடிப்படையிலான நடைமுறைகள் தொடா்பான சமகால முன்னேற்றங்கள் குறித்து கருத்துகள் பகிருகின்றனா். நிபுணா்களின் உரைகள், அறிவியல் கலந்துரையாடல்கள் மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகளின் விளக்கக் காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன. 9-ஆம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில், பரிசளிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.