FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி அரசு விடுமுறை தினங்கள் அறிவிப்பு

புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் 2027- ஆம் ஆண்டுக்கான பொதுவிடுமுறை தினங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட விடுமுறை தினங்கள் அரசு அறிவிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது.

56 வினாடிகள் முன்பு
புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி - கோப்புப் படம்
பகிர்:

புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் 2027- ஆம் ஆண்டுக்கான பொதுவிடுமுறை தினங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட விடுமுறை தினங்கள் அரசு அறிவிக்கையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும் என்று துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்படி புதுச்சேரி மற்றும் காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய 4 பிராந்தியங்களுக்கும் 17 நாள்கள் பொதுவிடுமுறையாகவும் வங்கிகளுக்கு 18 நாள்கள் பொது விடுமுறை நாள்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. வரையறுக்கப்பட்ட விடுமுறை தினங்களாக 33 நாள்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.