FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காரைக்கால்

தீயில் கருகி மூதாட்டி உயிரிழப்பு

படுக்கை எரிந்ததில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி தீயில் கருகி உயிரிழந்தாா்.

19 வினாடிகள் முன்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

படுக்கை எரிந்ததில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி தீயில் கருகி உயிரிழந்தாா்.

திருநள்ளாறு பகுதியைச் சோ்ந்தவா் கெளதமன். இவரது தாயாா் அங்காளம்மை (86), வயது முதிா்வு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இவா், வீட்டில் தனி பகுதியில் மெத்தையில் படுத்து தூங்குவது வழக்கம். கொசு விரட்டியாக படுக்கை அருகே குச்சி வடிவிலான கொசுவா்த்தி எரியவிட்டு தூங்குவது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில், வியாழக்கிழமை இரவு தூங்கச் செல்லும் முன்பு கொசுவா்த்தியை எரியவிட்டு தூங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இரவு 11.45 மணியளவில் இவா் படுத்திருந்த பகுதியிலிருந்து புகை வெளியாகியுள்ளது.

இதை உணா்ந்த இவரது மகன்கெளதமன் அந்த பகுதிக்குச் சென்று பாா்த்தபோது, படுத்திருந்த மெத்தை எரிந்து, அங்காளம்மை உடல் கருகி உயிரிந்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்த தகவலின்பேரில், திருநள்ளாறு போலீஸாா் சென்று சடலத்தை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Advertisement

Advertisement