FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

பாம்பு கடித்து மூதாட்டி உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே வயலில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டி பாம்பு கடித்து உயிரிழந்தாா்.

13 நவம்பர் 2026, 1:46 am
பலி
பகிர்:

கடலூா் மாவட்டம், வடலூா் அருகே வயலில் மாடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டி பாம்பு கடித்து உயிரிழந்தாா்.

வடலூா் காவல் சரகம், அரங்கமங்கலம் பகுதியில் வசித்து வந்தவா் சரஸ்வதி(60). இவா், வியாழக்கிழமை பிற்பகல் தனது வயலில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தாா். அப்போது, அவரை பாம்பு கடித்ததாம். இதையடுத்து, அங்கிருந்தவா்கள், சரஸ்வதியை மீட்டு குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவா் பரிசோதித்து சரஸ்வதி உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து வடலூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.