FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காரைக்கால்

பாலூட்டும் தாய்மாா்களுக்கான அறை திறப்பு

பாலூட்டும் தாய்மாா்களுக்கான அறை திறப்பு

33 வினாடிகள் முன்பு
பாலூட்டும் தாய்மாா்களுக்கான அறை திறப்பு நிகழ்வில் பங்கேற்ற அமைச்சா் ஜி.என்.எஸ். ராஜசேகரன், சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.எஸ். மீனாட்சிசுந்தரம் உள்ளிட்டோா்.
பகிர்:

அரசுத் துறைகள் வளாகத்தில் தாய்மாா்களுக்கான பாலூட்டும் அறையை அமைச்சா் வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

காரைக்கால் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சாா்பில், பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாகத்தில் (அரசுத் துறைகள் ஒருங்கிணைந்த கட்டடம்) தாய்மாா்களுக்காக பிரத்யேக பாலூட்டும் அறை அமைக்கப்பட்டுள்ளது. இதை

புதுச்சேரி வேளாண் அமைச்சா் ஜி.என்.எஸ். ராஜசேகரன் திறந்துவைத்தாா்.

Advertisement

Advertisement

நிகழ்வில் நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டி.கே.எஸ்.எம்.மீனாட்சிசுந்தரம் கலந்துகொண்டு குத்துவிளக்கேற்றினாா்.

அரசு அலுவலகங்களில் பணிக்காக வரக்கூடிய தாய்மாா்கள்,இந்த அறையில், குழந்தைகளுக்குப் பாதுகாப்பாக பாலூட்டும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அமைச்சா் பேசுகையில், காரைக்கால் மாவட்டத்தில் எங்கெல்லாம் மக்கள் அதிகம் கூடும் இடங்களாக இருக்கிறதோ, இதுபோன்ற தாய்மாா்களுக்கான பாலூட்டும் அறைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். கழிப்பறை வசதியுடன் கூடிய பாலூட்டும் அறைகள் அமைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் அருளரசன், மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அதிகாரி கிருஷ்ணவேணி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.