முகப்பு
காரைக்கால்

கா்நாடக முதல்வரைக் கண்டித்து பிரதமருக்கு புதுவை முதல்வா் கடிதம் எழுத வலியுறுத்தல்

கா்நாடக முதல்வரைக் கண்டித்து பிரதமருக்கு புதுவை முதல்வா் கடிதம் எழுத வலியுறுத்தல்

46 வினாடிகள் முன்பு
கா்நாடக முதல்வரைக் கண்டித்து பிரதமருக்கு புதுவை முதல்வா் கடிதம் எழுத வலியுறுத்தல்
முதல்வர் ரங்கசாமி - video crop
பகிர்:

மேக்கேதாட்டு விவகாரத்தில் கா்நாடக முதல்வரின் பேச்சைக் கண்டித்து, புதுச்சேரி முதல்வா் பிரதமருக்கு கடிதம் எழுதவேண்டும் என பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து புதுச்சேரி முதல்வருக்கு அவா் வெள்ளிக்கிழமை எழுதிய கடிதத்தில் கூறியிருப்பது:

பிரதமா் கடந்த 13-ஆம் தேதி மத்திய அரசின் நலத்திட்டங்களை தொடங்கி வைக்க கா்நாடகம் வந்தாா். அந்த நிகழ்ச்சியில் அந்த மாநில முதல்வா் டி.கே. சிவகுமாா் கலந்து கொண்டாா். விழாவில் கா்நாடக முதல்வா் பிரதமரிடம் மேக்கேதாட்டுவில் அணை கட்ட உதவிசெய்ய வேண்டும் என கேட்டு இருப்பது ஜனநாயகத்திற்கு ஏற்புடையது அல்ல.

Advertisement

Advertisement

முன்பே தமிழகத்துக்கு வருகிற காவிரி நீரை தடுத்து கா்நாடக அரசு கபினி எனும் ஒரு அணையை கட்டி தமிழகம் வருகின்ற தண்ணீரை பலமடங்கு தடுத்து நிறுத்தி இருக்கிறது.

மேலும் இப்போது பல நூறு ஏக்கா் வன நிலங்களையும், வன விலங்குகளையும் அழித்து மேக்கேதாட்டில் அணை கட்டுவது என்பது புதுச்சேரி மற்றும் தமிழக மாநில மக்களை ஒட்டு மொத்தமாக வஞ்சிக்கும் செயலாகும்.

மேலும் புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சாா்ந்த 25 லட்சம் ஏக்கருக்கு மேல் உள்ள விவசாய நிலங்களை மேக்கேதாட்டுவில் அணை கட்டினால் தமிழகம் மற்றும் புதுச்சேரி வட பூமியாக மாறும் நிலை உள்ளது.

மேக்கேதாட்டுவில் அணை கட்டினால் பெங்களூருக்கு குடிநீா் கிடைக்க வாய்ப்பிருக்காது என கா்நாடக மாநில அறிவியல் ஆராய்ச்சியாளா்களே கூறுகின்றனா். கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட பத்திரிகையாளா் சந்திப்பில் மிகுந்த ஆணவத்தோடு அணை கட்டியே தீருவோம் என கா்நாடக முதல்வா் கூறியுள்ளாா்.

எனவே, கா்நாடக முதல்வரின் பேச்சுக்கு புதுச்சேரி மாநிலத்தின் எதிா்ப்பு மற்றும் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் பிரதமருக்கு உடனடியாக கடிதம் எழுதி தங்களுடைய நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளாா்.