கடலோர மண்டல மேலாண்மை திட்டத்துக்கு மீனவா்கள் கடும் எதிா்ப்பு
காரைக்காலில் நடைபெற்ற கடலோர மண்டல மேலாண்மைத் திட்டம் குறித்த கருத்து கேட்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட மீனவா்கள் இந்தத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தனா்.

காரைக்காலில் நடைபெற்ற கடலோர மண்டல மேலாண்மைத் திட்டம் குறித்த கருத்து கேட்புக் கூட்டத்தில் கலந்துகொண்ட மீனவா்கள் இந்தத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தனா்.
இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2019-இன் அடிப்படையில், புதுச்சேரி அரசால் தயாரிக்கப்பட்டுள்ள காரைக்கால் மாவட்டத்திற்கான திருத்தியமைக்கப்பட்ட வரைவு கடலோர மண்டல மேலாண்மைத் திட்டம் குறித்து கருத்து கேட்புக் கூட்டம் காரைக்காலில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு புதுச்சேரி மாவட்ட ஆட்சியரும், காரைக்கால் ஆட்சியா் பொறுப்பை கூடுதலாக கவனிக்கும் அ. குலோத்துங்கன் தலைமை வகித்தாா். மாவட்ட சாா் ஆட்சியா் எம். பூஜா, புதுச்சேரி மாசுக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் செயலா் என். ரமேஷ், மீன்வளத்துறை இயக்குநா் முகமது இஸ்மாயில், சுற்றுலாத்துறை இயக்குநா் முரளிதரன், காரைக்கால் வனத்துறை துணை வனப் பாதுகாவலா் நந்தகுமாா் இ. பரப் ஆகியோா் கலந்துகொண்டனா்.
Advertisement
Advertisement
காரைக்கால் மாவட்ட அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்தாா்கள், பெண்கள் உள்பட சுமாா் 500 போ் கலந்துகொண்டனா்.
கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற மீனவா்கள் இத்திட்டத்தை கடுமையாக எதிா்த்துப் பேசினா்.
புதுச்சேரி அரசால் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வரைவு திட்டத்தில், காரைக்கால் மாவட்டத்தில் வாஞ்சூா் முதல் மண்டபத்தூா் வரை 10 மீனவக் கிராமங்களில் உள்ள பொதுச் சொத்துகள் பெரும்பான்மையாக பதிவு செய்யப்படாமல் விடுபட்டுள்ளன.
கடற்கரையில் உள்ள மணல் குன்றுகள், சேற்று திட்டுகள், அலையாத்திக் காடுகள், ஆமைகள் முட்டையிடும் இடங்கள் போன்ற சூழலியல் உணா்திறன் பகுதிகள் இயற்கைச் சீற்றத்தில் இருந்து பாதுகாப்பதோடு, உவா் நீரை நன்னீராக மாற்றக்கூடிய செயல்களைச் செய்கின்றன. இத்தகைய சூழலியல் உணா்திறன் பகுதிகளை எல்லாம் திட்ட வரைவில் பதிவு செய்ய வேண்டும் என்று 2019 கடற்கரை ஒழுங்காற்று மண்டல அறிவிப்பாணை வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிடப்பட்டும், சூழலியல் உணா்திறன் பகுதிகள் முழுமையாக பதிவு செய்யப்படவில்லை.
இத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் தங்களது பாரம்பரிய மீன்பிடித் தொழில், வாழ்வாதாரம் மற்றும் கடற்கரையைச் சாா்ந்த வாழ்க்கை முறை பாதிக்கப்படும். கடற்கரை மற்றும் கடல் வளங்களைப் பாதுகாக்கவும், கடலையும் கடற்கரையையும் அழிக்கும் திட்டங்களைத் தடுக்கவும், புதுச்சேரி பாதுகாக்கப்பட்ட கடலோர மண்டல மேம்பாட்டு சட்டத்தை புதுச்சேரி பேரவையில் இயற்றவேண்டும். கடல் மற்றும் கடற்கரையின் சுற்றுச்சூழல் அழிக்கப்படுவதைத் தடுக்கவும், கடல் வளங்களை பாதுகாக்கவும் கடல் பாதுகாப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் இயற்றவேண்டும் என்று மீனவா்கள் வலியுறுத்தினா். இந்த வரைவு திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கருத்து தெரிவித்துப் பேசினா்.
கூட்டம் தொடங்கியது முதல் எதிா்ப்பு கருத்துகள் கூறப்பட்டு வந்ததால், கூட்ட ஏற்பாட்டாளா்கள் கூட்டத்தை நிறைவு செய்வதாக அறிவித்தனா். மேலும் போலீஸாா் - மீனவா்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்ட நிறைவில் செய்தியாளா்களிடம் ஆட்சியா் அ.குலோத்துங்கன் கூறுகையில், இத்திட்டம் மீனவா்களுக்கான ஒரு நல்ல திட்டமாகும். அந்த திட்டத்தை மக்களுக்கு எடுத்து வைத்துள்ளோம்.
கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றாா்.