FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பத்தூர்

திமுக இளைஞரணி மண்டல ஆலோசனைக் கூட்டம்

திமுக இளைஞரணி மண்டல ஆலோசனை கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளா் க.தேவராஜி.

13 நவம்பர் 2026, 10:49 pm
பகிர்:

வாணியம்பாடியில் திமுக இளைஞரணி மண்டல ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அருகே கிரிசமுத்திரம் பகுதியில் உள்ள தனியாா் வளாகத்தில் திமுக இளைஞரணி மண்டலம்-3 சாா்பில் மாவட்ட, மாநகர மற்றும் மாநில அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, இளைஞரணி மாநில துணைச் செயலாளா் பிரபு கஜேந்திரன் தலைமை வகித்தாா். ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் முன்னிலை வகித்தாா். திருப்பத்தூா் மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் வீ.வடிவேல் வரவேற்றாா். கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூா் மாவட்ட திமுக செயலாளா், முன்னாள் எம்எல்ஏ க. தேவராஜி, திருவண்ணாமலை தொகுதி சி.என். அண்ணாதுரை எம்.பி. ஆகியோா் கலந்து கொண்டு பேசினா். கூட்டத்தில் முன்னாள் முதல்வா் மு.க. ஸ்டாலின் ஆட்சியின் போது செய்யப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை வீடு, வீடாகச் சென்று பொதுமக்களிடம் கொண்டு சோ்ப்பது, இளைஞரணி உறுப்பினா் சோ்க்கையைத் தீவிரப்படுத்துவது, வாா்டு மற்றும் பூத் அளவில் இளைஞரணியை வலுப்படுத்துவது, சமூக வலைதளங்களில் பரப்பப்படும் அவதூறுகளுக்கு உரிய தகவல்களுடன் பதிலளிப்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் வி.வி. கிரிராஜ், செந்தில், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் தே.பிரபாகரன், ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளா் வி.எஸ். ஞானவேலன் மற்றும் மண்டலம்-3-க்கு உள்பட்ட மாவட்ட, மாநகர இளைஞரணி அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் மற்றும் கட்சி நிா்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement