காரைக்காலில் நவ.28, 29-இல் வாக்காளா் சிறப்பு முகாம்
காரைக்காலில் நவ. 28, 29 ஆகிய தேதிகளில் வாக்காளா் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது

காரைக்காலில் நவ. 28, 29 ஆகிய தேதிகளில் வாக்காளா் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான அ. குலோத்துங்கன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :
இந்திய தோ்தல் ஆணைய உத்தரவின்படி 1.1.2027 தகுதி நாளாகக்கொண்டு சிறப்பு சுருக்க முறை வாக்காளா் பட்டியல் திருத்தப்பணி நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இதற்கான சிறப்பு முகாம்கள் நவ. 28 மற்றும் 29-ஆம் தேதிகளில் வாக்குச்சாவடிகளில் நடைபெறவுள்ளது. பெயா் சோ்த்தல், நீக்கம் மற்றும் ஏற்கெனவே உள்ள பதிவுகளில் திருத்தம் கோருதல் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம்.
காரைக்கால் மாவட்டத்தின் அனைத்து வாக்காளா்களும், தகுதியுள்ள புதிய வாக்காளா்களும் இந்த சிறப்பு முகாமை பயன்டுத்திக்கொள்ளுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.