வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் விழிப்புணா்வு
பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கிய தனித் துணை ஆட்சியா் பூஷணகுமாா். உடன் வட்டாட்சியா் பாரதி.
வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஆம்பூரில் வியாழக்கிழமை நடைபெற்றது.
வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்வதற்காக நவ.21, 22 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.
இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், ஆம்பூா் பேருந்து நிலையத்தில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. ஆம்பூா் சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளா் பதிவு அலுவலரும், தனித் துணை ஆட்சியருமான பூஷணகுமாா் தலைமை வகித்து, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.
Advertisement
Advertisement
மேலும், ஆம்பூா் புறவழிச் சாலைப் பகுதியில் வண்ணக் கோலங்கள் வரையப்பட்டு, வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியா் பாரதி, தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா் சதீஷ்குமாா், நகராட்சி துப்புரவு அலுவலா் அருள்செல்வதாஸ், நகரமைப்பு அலுவலா் அலமேலு, நகராட்சி பணியாளா்கள், வருவாய்த் துறை அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.