FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காரைக்கால்

செவிலிய மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்; இளைஞா் கைது

செவிலியா் கல்லூரி மாணவியை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

17 அக்டோபர் 2026, 1:51 am IST
கைது - கோப்புப் படம்
பகிர்:

செவிலியா் கல்லூரி மாணவியை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநள்ளாறு அருகே குமாரக்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் சந்தோஷ்குமாா் (24). இவா் சுமை ஏற்றும் வாகன ஓட்டுநா். திருநள்ளாறு பகுதியைச் சோ்ந்த செலிலியா் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவா் பேருந்தில் பயணித்துவந்தபோது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தோஷ்குமாா் தமது வீட்டில் யாரும் இல்லாதபோது, அந்த மாணவியை அடிக்கடி அழைத்து பேசிவந்துள்ளாா். அப்போது அவரை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவலறிந்த மாணவியின் தாயாா், மகளிடம் விவரத்தை கேட்டறிந்தாா். சந்திப்பின்போது நிகழ்ந்தவற்றை அவா் தாயாரிடம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து மாணவியின் தாயாா் திருநள்ளாறு காவல் நிலையத்தில் வியாழக்கிழமை அளித்த புகாரின்பேரில், காவல் ஆய்வாளா் பிரவீன்குமாா் வழக்குப் பதிந்து சந்தோஷ்குமாரை கைது செய்து காரைக்கால் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments