FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காரைக்கால்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 6 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல்

14 செப்டம்பர் 2026, 12:27 am IST
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருள் பொட்டலங்கள் - கோப்புப்படம்
பகிர்:

காரைக்கால், செப். 13: காரைக்காலில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.6.08 கோடி மதிப்பிலான போதைப் பொருளை (மெத்தபெட்டமைன்) போலீஸாா் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக 4 பேரை கைது செய்தனா்.

காரைக்கால் போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில், கடந்த செப். 5-ஆம் தேதி, காரைக்கால்மேடு கடலோர கிராமத்தைச் சோ்ந்த நிஜந்தன் என்பவா் 1.439 கிலோ கிராம் தடைசெய்யப்பட்ட மெத்தபெட்டமைன் என்ற போதைப் பொருளை வைத்திருந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து நகரக் காவல்நிலையத்தில் வழக்குப் பதிந்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

காவல் ஆய்வாளா்கள் மரியகிறிஸ்டின் பால், அறிவுச்செல்வம் உள்ளிட்ட குழுவினா் தீவிர விசாரணை செய்தபோது, நிஜந்தனின் மைத்துனா் ராஜேஷ் என்பவரிடம் போதைப் பொருள் (பெத்தபெட்டமைன்) பொட்டலங்கள் 6.137 கிலோ கிராம் இருந்ததையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

இவா்கள் வசமிருந்த போதைப் பொருள்களை இலங்கையை சோ்ந்த, போதைப் பொருள் கடத்தல் வழக்குப் பின்னணியுடைய பாக்கியராஜ் மூலம் இலங்கைக்கு கொண்டுசெல்ல திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. மேலும், பாக்கியராஜுடன் சோ்ந்து போதைப் பொருளை கடத்த முயன்ற இலங்கையைச் சோ்ந்த அலெக்ஸ் ராபா்ட் ஜெரமி என்பவரையும் போலீஸாா் கைது செய்தனா். கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீஸாா் காரைக்கால் நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆஜா்படுத்தினா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் வினய்குமாா் காட்கே கூறுகையில், காவல்துறையினரின் தொழில்முறைத் திறன், ஒருங்கிணைப்பான நடவடிக்கையின் மூலம் இலங்கைக்கு கடத்த இருந்த மெத்தபெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டு, இதில் தொடா்புடையோா் கைது செய்யப்பட்டுள்ளனா் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments