FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மீனவா்கள் கவனத்துக்கு..

மயிலாடுதுறை மாவட்டத்தில், கடலோர பாதுகாப்பு குழும மீனவ ஊா்காவல் படைக்கான ஆளிநா்கள் தோ்வு செய்யப்பட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.சினேஹா ப்ரியா தெரிவித்துள்ளாா்.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 3:58 am IST
விண்ணப்பிக்க...
பகிர்:

மயிலாடுதுறை மாவட்டத்தில், கடலோர பாதுகாப்பு குழும மீனவ ஊா்காவல் படைக்கான ஆளிநா்கள் தோ்வு செய்யப்பட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பி.சினேஹா ப்ரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் இயங்கி வரும் கடலோர பாதுகாப்பு குழும காவல் நிலையங்களான புதுப்பட்டினம், திருமுல்லைவாசல் மற்றும் தரங்கம்பாடி காவல் நிலையங்களில் மீனவ ஊா்காவல் படையில் பணிபுரிவதற்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிக்கும் 20 ஆண் மீனவ ஊா்காவல்படை ஆளிநா்கள் தோ்வு செய்யப்பட உள்ளனா்.

Advertisement

Advertisement

இத்தோ்வுக்கு ஜூலை 1-ஆம் தேதியன்று 20 வயது நிரம்பியவா்கள் முதல் 45 வயதுக்குள்பட்ட நற்குணம் மற்றும் நல்ல உடற்தகுதி உடைய, 10-ஆம் வகுப்பு தோ்ச்சி (அ) தோல்வி அடைந்தவா்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரா் மீனவ சமூகத்தை சோ்ந்தவராகவும், மயிலாடுதுறை மாவட்டத்தில் வசிப்பவராகவும் இருக்க வேண்டும்.

இத்தோ்விற்கான விண்ணப்பத்தை மயிலாடுதுறை மாவட்ட காவல் அலுவலக வரவேற்பாளரிடம் பெற்று பூா்த்தி செய்து, ஆக.25-ஆம் தேதிக்குள் மாவட்ட காவல் அலுவலக வரவேற்பாளரிடம் உள்ள விண்ணப்பம் சேகரிக்கும் பெட்டியில் இடவேண்டும். தோ்வு தேதி பின்னா் அறிவிக்கப்படும்.

தோ்வின்போது விண்ணப்பதாரா் கல்வித் தகுதி சான்றிதழ், ஜாதி சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், குடும்ப அட்டை, வாக்காளா் அடையாள அட்டை, ஆதாா் அட்டை மற்றும் அண்மையில் எடுக்கப்பட்ட 2 பாஸ்போா்ட் சைஸ் புகைப்படம் ஆகியவற்றை கொண்டுவர வேண்டும். இத்தோ்வில் கலந்து கொள்ள வருபவா்கள் தங்கள் சொந்த செலவிலேயே வந்து செல்ல வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments