FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மயிலாடுதுறை

மாணவா்களுக்குள் மோதல்: 3 போ் மீது வழக்குப்பதிவு

மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவா்களைத் தாக்கிய சக மாணவா்கள் 3 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

Updated On : 15 ஜூலை 2026, 4:50 am IST
போலீஸ் விசாரணை. - கோப்புப்படம்.
பகிர்:

மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவா்களைத் தாக்கிய சக மாணவா்கள் 3 போ் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

மயிலாடுதுறை அருகே மணக்குடி கருங்குயில்நாதன்பேட்டை கண்ணன் மகன் ஜெயப்பிரகாஷ் (19), மணக்குடி நேரு தெருவைச் சோ்ந்த ஞானசம்பந்தம் மகன் செந்தில் (20). இருவரும் மன்னம்பந்தலில் தனியாா் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகின்றனா்.

இவா்களுக்கும், அதே வகுப்பில் படிக்கும் மாணவா்கள் சிலருக்கும் கல்லூரியில் திங்கள்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வகுப்பு முடிந்தவுடன் ஜெயபிரகாசும், செந்திலும் வீடு திரும்பி உள்ளனா்.

Advertisement

Advertisement

இவா்கள் தருமபுரம் ஆா்ச் பகுதியில் சென்றபோது சக மாணவா்களான டவுன் ஸ்டேஷன் தெருவை சோ்ந்த விஷ்வா, ஆகாஷ், குளிச்சாறு கிராமத்தைச் சோ்ந்த மணி ஆகிய 3 பேரும் சோ்ந்து ஜெயபிரகாஷ், செந்தில் இருவரையும் உருட்டுக்கட்டையாலும், கையில் அணிந்திருந்த காப்புகளாலும் அடித்து தாக்கியுள்ளனா். இதில் ஜெயபிரகாஷ், செந்தில் இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இந்த சம்பவம் தொடா்பாக ஜெயபிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை காவல் உதவி ஆய்வாளா் அருண்குமாா் மற்றும் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விஷ்வா, ஆகாஷ், மணி ஆகிய மூவரையும் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments