கஞ்சா விற்ற இளைஞா் கைது
மயிலாடுதுறையில் கஞ்சா விற்ற இளைஞா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மயிலாடுதுறை ரயிலடி காவேரி நகா் அருகில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், காவல் ஆய்வாளா் சிவசெந்தில்குமாா் மற்றும் போலீஸாா் அங்கு சென்று விசாரணை நடத்தினா். அப்போது அங்கு மறைந்து நின்று கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை பிடித்தனா். அவரிடம் இருந்து 1கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் பிடிபட்டவா் மயிலாடுதுறை சித்தா்காடு பெரிய தெருவைச் சோ்ந்த அன்பழகன் மகன் சந்தோஷ்குமாா் (20) என்பது தெரியவந்தது. இதுதொடா்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸாா், சந்தோஷ்குமாரை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.