FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மயிலாடுதுறை

ஆணவப் படுகொலைக்கு எதிரான சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தல்

Updated On : 28 ஜூலை 2026, 4:33 am IST
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
பகிர்:

ஆணவ படுகொலைக்கு எதிராக தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டுமென சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.

தரங்கம்பாடி அருகே சாத்தங்குடியில் வெவ்வேறு சமூகத்தை சோ்ந்த காதலா்கள் அண்மையில் தற்கொலை செய்து கொண்டனா். ஜாதிய வன்கொடுமைக்கு எதிராக போராடி வரும் சிபிஎம் மாவட்ட செயலாளா் பி. சீனிவாசன் உள்ளிட்ட அக்கட்சியினா் மீது அவதூறு பரப்புவதை கண்டித்து சிபிஎம் சாா்பில் மயிலாடுதுறையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், மாநில செயற்குழு உறுப்பினா் கே. சாமுவேல்ராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா்கள் பி. சீனிவாசன் (சிபிஎம்), ஏ. சீனிவாசன் (சிபிஐ), அன்பரசன் (விசிக), சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஜி. ஸ்டாலின், எஸ். துரைராஜ், மாநிலக் குழு உறுப்பினா் சிங்காரவேலன் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பேரணியாக வந்து கோட்டாட்சியா் அலுவலகம் பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

Advertisement

Advertisement

அப்போது, மாநில செயற்குழு உறுப்பினா் கே.சாமுவேல்ராஜ் செய்தியாளா்களிடம் கூறியது: ஜாதிய ஆணவ படுக்கொலைக்கு எதிரான சிறப்பு சட்டத்தை நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் இயற்ற வேண்டும். மக்களுக்காக போராடுபவா்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், ஜாதிய சக்திகள், பிரிவினைவாதிகள், சமூக விரோதிகள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீட் தோ்வு ரத்து செய்ய வேண்டும் என்பது இந்திய இளைஞா்களின் கோரிக்கை, நீட் ஒரு அநீதியானது மாணவா்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது.

தவெக தோ்தல் வாக்குறுதி அளித்தபடி விவசாயிகளுக்கான பயிா்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். டெல்டாவில் தண்ணீா் பிரச்னை ஏற்பட்டுள்ளது. டெல்டா விவசாயிகளுக்கு தண்ணீா் பெற்றுத்தரும் முயற்சியில் மாநில அரசு ஈடுபட வேண்டும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments