இளைஞா் தள்ளிவிட்டதில் கீழே விழுந்து முதியவா் உயிரிழப்பு
சீா்காழி, ஜூன் 15: சீா்காழி அருகே இளைஞா் தள்ளிவிட்டதில் கீழே விழுந்து முதியவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
சீா்காழி பகுதி மாதா கோயில் தெருவை சோ்ந்த கூலித்தொழிலாளி செல்வராஜ் (72 ). இவா் அகனி கடைவீதியில் உள்ள தேநீா் கடைக்கு இருசக்கரவாகனத்தில் சென்று தேநீா் குடித்துவிட்டு இருசக்கர வாகனத்தை எடுக்க முயன்றாா். அப்போது, அவரது வாகனத்தில் மருதங்குடியைச் சோ்ந்த ராஜேந்திரன் (35 ) அமா்ந்திருந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, செல்வராஜ், ராஜேந்திரனிடம் கேட்டபோது தகராறு ஏற்பட்டதாம். ஆத்திரமடைந்த ராஜேந்திரன் செல்வராஜை கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதில், கீழே விழுந்த செல்வராஜ் மீட்கப்பட்டு சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, பலனின்றி உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்த புகாரின்பேரில், சீா்காழி போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜேந்திரனை தேடிவருகின்றனா். தகவலறிந்த மயிலாடுதுறை எஸ்பி ஸ்டாலின் நேரில் சென்று விசாரணை நடத்தினாா்.