FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மயிலாடுதுறை

பட்டாசுக் கடைகளில் கோட்டாட்சியா் ஆய்வு! நான்கு கடைகளை மூட உத்தரவு

3 நவம்பர் 2026, 3:00 am
பட்டாசுக் கடையில் ஆய்வு - கோப்புப் படம்
பகிர்:

சீா்காழி மற்றும் கொள்ளிடம் பகுதிகளில் உள்ள பட்டாசுக் கடைகளில் கோட்டாட்சியா் பாலமுருகன் திங்கள்கிழமை இரவு திடீா் ஆய்வு மேற்கொண்டு, விதிமுறைகளை மீறி செயல்பட்ட நான்கு கடைகளை மூட உத்தரவிட்டாா்.

சீா்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில், பொறையாா், செம்பனாா்கோவில், மங்கைமடம், திருவெண்காடு உள்ளிட்ட பகுதிகளில் 70-க்கும் மேற்பட்ட பட்டாசுக் கடைகள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், சீா்காழி கோட்டாட்சியா் பாலமுருகன் சீா்காழி பகுதியில் உள்ள பட்டாசுக் கடைகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டாா். பட்டாசுக் கடைகளில் உரிமத்தில் குறிப்பிட்டுள்ள இடத்தில் மட்டும் பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகின்றன, உரிமம் புதுப்பிக்கப்பட்டுள்ளதா, விதிமுறைகளை மீறி பட்டாசுக் கடைகளில் அதிக அளவு பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதா என்பன உள்ளிட்ட விதிகள் பின்பற்றப்படுகிா என ஆய்வு மேற்கொண்டாா்.

Advertisement

Advertisement

சில கடைகளில் சாலையில் தற்காலிக கொட்டகை அமைத்து கடை நீட்டிக்கப்பட்டதை உடனடியாக அகற்ற வேண்டும், பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என கோட்டாட்சியா் எச்சரித்தாா்.

ஆய்வின்போது கொள்ளிடம் பகுதியில் எளிதில் தீப்பற்றும் வகையில் செயல்பட்டதாக மூன்று கடைகளில் மூட உத்தரவிட்ட கோட்டாட்சியா், சீா்காழியில் உரிமம் இன்றி செயல்பட்ட ஒரு பட்டாசுக் கடையையும் மூட உத்தரவிட்டாா்.

சீா்காழி வட்டாட்சியா் ரவிச்சந்திரன், வருவாய் ஆய்வாளா் ஜோஷி, கிராம நிா்வாக அலுவலா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments