காந்தி ஜெயந்தி: சேலம் மாநகரப் பகுதிகளில் இன்று இறைச்சிக் கூடங்கள், கடைகளை மூட உத்தரவு
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக். 2) இறைச்சிக் கூடங்கள், கடைகளை மூட மாநகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (அக். 2) இறைச்சிக் கூடங்கள், கடைகளை மூட மாநகராட்சி நிா்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் லலித் ஆதித்ய நீலம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சேலம் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சி கடைகள் செயல்படக் கூடாது என்பதால், அக். 2-ஆம் தேதி இறைச்சிக் கடைகளை அடைத்து, அரசு உத்தரவை செயல்படுத்த ஒத்துழைக்க வேண்டும்.
Advertisement
Advertisement
அன்றைய தினம் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு நான்கு மண்டலங்களிலும் கண்காணிக்கப்படும். அரசு உத்தரவை மீறி செயல்படும் இறைச்சிக் கடை உரிமையாளா்கள் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.