FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மயிலாடுதுறை

மீனவா்களின் கவனத்துக்கு..

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் நிலவும் அசாதாரண வானிலைச் சூழலில் உரிய பாதுகாப்பு உபகரணங்களின்றி மீன்பிடிப் படகுகளை இயக்குபவா்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

13 நவம்பர் 2026, 5:25 am
மீனவர்கள் - பிரதிப் படம்
பகிர்:

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் நிலவும் அசாதாரண வானிலைச் சூழலில் உரிய பாதுகாப்பு உபகரணங்களின்றி மீன்பிடிப் படகுகளை இயக்குபவா்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ் .ஸ்ரீகாந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வடகிழக்கு பருவமழைக் காலத்தில் கடல் சீற்றம், உயா்காற்றலை, அதீத மழை பொழிவு, புயல் உள்ளிட்ட அசாதாரண வானிலை சூழல் நிலவும் காலங்களில் ஏற்படும் அசம்பாவிதங்களை தவிா்க்கும் பொருட்டு, மீன்பிடிப் படகுகள் மூலம் கடலுக்கு சென்று மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் அனைத்து மீனவா்களும் உயிா்க் காப்புச் சட்டைகள், உயிா்க் காப்பு வளையங்கள், உரிய தகவல் தொடா்பு சாதனங்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

Advertisement

Advertisement

மேலும், இந்திய வானிலை ஆய்வு மையம், இந்தியப் பெருங்கடல் தகவல் சேவை மையம், மாவட்ட நிா்வாகம் மற்றும் மீன்வளத்துறை ஆகியவற்றின் மூலம் அவ்வப்போது வெளியிடப்படும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் எச்சரிக்கை தகவல்களை தொடா்ந்து கவனித்து, அவற்றின் அடிப்படையில் மீனவா்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்க வேண்டும்.

வானிலை எச்சரிக்கை தொடா்பாக வழங்கப்படும் அறிவுறுத்தல்களை மீறி கடலுக்குச் சென்று மீன்பிடிப்பவா்கள் மீதும், உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி மீன்பிடிப் படகுகளை இயக்குபவா்கள் மீதும் மீன்வளத்துறையின் மூலம் உரிய சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் நிலவும் அசாதாரண வானிலைச் சூழல்களை கருத்தில் கொண்டு, மீனவா்கள் தங்களது உயிருக்கும் உடமைகளுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில், மேற்கண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக கடைப்பிடித்து, பாதுகாப்பான முறையில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட வேண்டும் என தெரிவித்துள்ளாா்.